Wednesday 11 September 2013

சோதோம் பட்டணம்






நிலா வெளிச்சம் ஊருக்குள்ள நுழைய முடியல. பனிமூட்டமும், தூசும் சோதோமை போர்வையா போர்த்திகிட்டு இருக்கு. ஊர் முழுக்க கும்பல், கூச்சல், குடியாட்டம். உடம்புல ஒட்டுத்துணி கூட இல்லாம செலர் ஓடுறாங்க. அவங்கள துரத்திக்னு இன்னொரு கும்பல். மரத்தடியில, கூடாரத்துல அய்யோ... இன்னாது... கீழே கெடத்தி அவுங்க மேல ஏறி உட்கார்ந்துக்னு வலிக்குதே.. அம்மா... வுடுங்கடா என்னை வுடுங்கடா வலிக்குதுடா... +2, காலேஜ் பசங்க இங்க எப்படி வந்தாங்க? என்தொடை வழியா ரத்தம் வழியுதே...


சதை மரம் ஒன்னு ஊர் மத்தியில கிடுகிடுனு மேல மேல வளந்துகினே போவுது. ரொம்ப உயரமா வெள்ளையா மொந்தையா பச்சை மாட்டுக்கறி செவப்பு மொனையோட. அதுமேல தொங்கிக்னு ஒரு கூட்டம். ஒடம்பெல்லாம் நடுங்குது.

லோந்து வூட்டுக்கு முன்னால தீப்பந்தங்கள் வெச்சீக்னு குடிபோதைல நெறைய பேர் நிக்குறாங்க. லோத்தோட செவப்பு கைகால்லாம் நடுங்குது.

லோத்து, சொன்னது சொன்னதுதான். மொதல்ல அந்த ஆளுகள வெளியே அனுப்பு. இல்லாகாட்டி வூட்ட கொளுத்திடுவோம்

ஆதியாகமம் 19: 1-26

அய்யா வானாங்கயா. அவுங்க என் வூட்டுக்கு வந்திருக்ர விருந்தாளிக அவுங்கள விட்டுடுங்க. வேணும்னா ஒன்னு செய்யலாம். எனக்கு ரெண்டு அழகான பொண்ணுங்க இருக்காங்க. அவர்களை வேன்னாக்க அழைச்சின்னு போங்க. உங்க இஷ்டம் போல வெச்சிக்கோங்க.ஒரு கத்தி அவன் தொடைய கீறி ரத்தம் வழியுது.

எங்களுக்கு அந்த அழகான ஆளுகதா வேணும் டேய் கொளுத்துங்கடா.

அய்யா அய்யா இருங்க. தோ பேசிட்டு வர்ரேங்க அதுவரைக்கும் ஒண்ணும் செஞ்சிடாதீங்க.

உள்ளே போறான் லோத்து. ரொம்ப அழகாத்தான் தெரியராங்க. வெள்ளையா ஓயரமா பெரிய கண்களோட. தேவதூதர்கள்னா சும்மாவா? ரெக்கைகளை காணோம். லோந்து பெஞ்சாதிக்கு உருண்டை மூஞ்சி அம்மா மாதிரி. ஆனா கருப்பு. பின்னாடி பசங்க ஒளிஞ்சுனு நிக்குதுக, பாவம்... தேவதூதர்கள் மொகம் செவந்திருக்கு.

லோந்து இந்த ஊர்ல நீ மட்டும்தான் நல்லவன்னு கர்த்தர் நம்புகிறார். உன் குடும்பத்தோட சோதோமைவிட்டு உடனடியாக நீ வெளியேற வேண்டும். நாங்க பாவங்கள் நிறைந்த சோதோமை தீக்கறையாக்க போகிறோம். இது கர்த்தரின் கட்டளை  ம்ம், கௌம்புங்க.

பின் வழியா எல்லோரையும் இட்டுக்குன்னு இருட்டுக்குள்ள போறான் லோத்து. யாரும் பார்க்கல. முன்கதவுல டமார் டமார்னு சத்தம். லோத்தோட ஆடுகள் ம்.ம்.மா என்று கத்துது. லோத்து பெஞ்சாதி 2 குட்டி ஆடுகளை தடவிக்கொடுக்கராங்க. திரும்பி திரும்பி பார்த்துக்கின்னே நடக்கரா.

இனி நீங்க விரும்பின மாதிரி சோவாருக்கு போகலாம். ஆனா திரும்பிப் பார்க்கக் கூடாது. மீறினால் உப்பித்தூணாகி விடுவீர்கள்.தேவதூதர்கள் எச்சரிக்கை செஞ்சாங்க. திரும்பிப் பார்க்காம நடக்றாங்க. மொதல்ல லோத்து பசங்க, அப்புறம் லோத்து, கடேசியா லோத்து பெஞ்சாதி. அவ மொகத்துல கோவம் தெரியுது.

நீயெல்லாம் நல்லவனாக்கும். மாமா பையா.லோத்தை பார்த்து பயங்கர கோவமா கத்துறா. லோந்து திரும்பியே பாக்கலே. இன்னும் வேகமாக நடக்கிறான். பசங்க ரொம்ப மின்னாடி நடக்குறாங்க. விடிகால ஆயிடிச்சு. சூரியன் மலைக்கு அப்பால இருந்து எட்டி பாக்குது. வானம்பூரா செவப்பு நெறத்த வாரி எறைக்குது. இந்த  கரும்புகை எங்கேருந்து வருது? அய்யோ சோதோம் திகுதிகுன்னு எரிஞ்சினிருக்கு. வூடுக, மரங்க, மனுசங்க, மாடுக, சதை மரம் எல்லாம் நெருப்புல எரிஞ்சி சாம்பலாவுது. புள்ளி புள்ளியா ஓடுறது என்ன? ஓட்டகங்க. ஆடுக மலை மேல ஏற பாக்குதுக, முடியல. உருண்டு கீழ விழுதுக நெருப்பு பந்துகளா. ஒரு புறா சர்ர்னு செங்குத்தா எரிஞ்சிக்னே மேல போயி தொப்புனு கீழ சரியுது. ஊர் எல்லைல தேவதூதர்கள் கைய இடுப்புல வெச்சிக்னு வேடிக்கை பார்த்துக்குனு... இப்ப பெருசா வெள்ளை ரெக்கைகள் தெரியது. பறக்க போராங்களா?

திடீர்னு ஒரு கொய்ந்த அழுவுற சத்தம் நெஞ்ச கிய்ச்சி போட்ற மாதிரி.  ம்மாஒரு கொய்ந்த இல்ல... பத்து பதினஞ்சி இருக்கும். தத்தக்கா பித்தகானு ஓடி வருதுக. ஒடம்பு முழுக்க நெருப்பு. பார்க்கவே முடியல.

லோத்து பெஞ்சாதி சடர்னுநிக்றா. திரும்பிப் பாக்றா அய்யயோ கொழந்தைக... காப்த்துங்கமார்ல அடிச்சிக்னுற அழறா. எனக்கும் அழுகை வருது. பாவிகளா... 

கொஞ்ச நேரத்தில் அவசத்தம் நின்னு போவுது. அசைவே இல்லை. கைய விரிச்சமேனிக்கு அப்படியே உப்புத் தூணாக நிக்குறா. ரெண்டு கண்ணீர் துளி தொத்துனு மணல்மேல விழுது. லோத்து மகள்களோட சோவாரு எல்லையை அடைஞ்சிட்டான். பின்னால் அவ வராளா இல்லியானு திரும்பிப் பாக்கவே இல்ல. தேவதூதர்கள் உப்புதூண பார்த்து ஏளனமா சிரிக்றாங்க.

கீ போர்ட்லிருந்து எழுந்தார் இறைவன். ஜெயம், ஜெயம், எனவே... மியூசிக் கேட்குதே! இங்க எப்படி வந்திச்சி நம்ம சர்ச்?

ஜோஷ்கா திடுக்கிட்டு விழித்துக் கொண்டான். நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. உடல் முழுக்க தெப்பமாக வியர்திருந்தது. 22 வறான்டா பையன்களின் மூச்சுவிடும் சப்தம், அந்த சின்ன அறைக்குள் சீராக கேட்டுக் கொண்டிருந்தது கொசுக்களின் ரீங்காரத்துடன். 7சி சாமின் விசுக் விசுக்கென்று கை சூப்பும் சப்தம் வேறு. ஒன்றுக்கு வருவதுபோல் இருந்தது. எழுந்துபோய் மூடியுருந்த  பிரம்மாண்ட ஜன்னலைத் திறந்தான். குபூக்கென்று குளிர்காற்று அவன் உடலைக் கவ்வியது. சற்று தூரத்தில் ஈஸ்டருக்காக மலிகைப்பூ அலங்காரத்துடன் கம்பீரமாக நின்றிருந்தது சர்ச். நிலா வெளிச்சம், புகை, பனிப்போர்வயைக் கடந்து தரைக்கு வர முடியவில்லை. ஈஸ்டர் ஆராதனைப் பாடல்களை வாசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் கொயர்மாஸ்டர். சர்ச் கடிகாரம் 3 அடித்து வசனம் சொல்லிற்று.

கழிவறைக்காகக் கீழே போனால் காலேஜ் பசங்களிடம் மாட்டிக்கொள்வோம் என்று தோன்றியது.

தட்டுதடுமாறி தன் அலமாரியில் இருந்த தன் டம்ளருடன் ஜன்னல் அருகே வந்தான். புளிய மரம் லேசாகக் காற்றில் ஆடியது. டம்ளரில் சப்தமில்லாது ஒன்றுக்கு இருந்து, ஜன்னல் வழியே புளியமரத்தின் மீது ஊற்றினான். மரத்தின் வழியே மௌனமாக வழிந்து சென்றது. திரும்பிப் பார்த்தான். யாரும் பார்க்கவில்லை. டவல், சோப்புடன், புளியமரத்தின் ஒன்றுக்கு வழியாத பகுதி வழியே கிழே இறங்கி கிணற்றில் தண்ணீர் இறைத்துக் குளித்தான். வார்டன் தன் மகள்களுடன் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருப்பது ஜன்னல் வழியே தெரிந்தது. மனைவியைக் காணவில்லை. நைட் டியூட்டி என்று சொன்னது நினைவுக்கு வந்தது. வார்டனின் மச்சினிச்சி ஏசம்மாள் அதே அறையில் படுத்திருப்பதை அப்போதுதான் கவனித்தான். கீழ்அறைக்கு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான். பெரியபையன்கள் எவனும் எழுந்திருக்கவில்லை. அவர்கள் வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நினைத்தபோது குலை நடுங்கியது.

துண்டை காயப் போட்டுவிட்டு மறுபடி புளியமரத்தின் வழியே விறுவிறு என்று மேலேறினான். மூன்றாம் வார்த்தை* மரம் என்று எழுதப்பட்ட பெயர்ப்பலகை மீது சிறுநீர் பளபலித்தது. சோப்பை வைத்து விட்டு, ஜன்னலருகே வந்தான். புளியமரம் தன் கிளைகளையெல்லாம் தன் பக்கம் திருப்பி அழைப்பதை உணர்ந்தான். மரத்திலேறி அகன்ற மேல்கிளையில் காலை நீட்டிப்படுத்தான். மரம் அவனை மெல்ல தாலாட்டியது. ம்மா...என்று முணுமுணுத்தபடி கிளையை அனைத்தும் கொண்டான் அப்படியே தூங்கிப் போனான்.

*தன் தாயைநோக்கி அதோ உன் மகன் என்றார் அவர். அந்த சீஷனை நோக்கி அதோ உன் தாய் என்றார்.
                                      - யோவான் 19 : 26,27

     கோயில் கடிகாரத்தின் 4 மணி வசனம் அவனை எழுப்பியது. கிளைவழியே ஜன்னலுக்குள் குதித்தான். எல்லோரும் குளிக்கச் சென்றிருந்தனர். பாஸ்டர் பெரன்ட்ஸ் சாமுவேல் ராஜரத்தினம் கிறிஸ்மஸ்க்கு வாங்கித் தந்திருந்த பஞ்சுமிட்டாய் நிற சட்டையை மாட்டிக் கொண்டான். பாண்ட் போடும் போது ஊசி குற்றியது போல் பின்புறம் வலித்தது. அம்மா எங்குருப்பாள் என்று யோசித்தான். நெல்லூரில் நரசிம்மாராவுக்கு வேறு குழந்தை பெற்றிருப்பாள் என்று நினைக்கும்போது அழுகை வந்தது. சென்ற வருஷம் பெரிய வெள்ளியன்று கடைசியாக அவள் வந்தபோது வயிறு சற்று பெரியதாக இருந்தது. அன்றுதான் நரசிம்மராவைப் பார்த்தான். அப்பாவைவிட உயரமாக, முரடனாகத் தெரிந்தான். அயனாவரத்தில் கறிக்கடை வைத்திருப்பதாக மட்டும்தான் சொன்னாள். இனி இங்கு தான் வரப்போவதில்லை என்று ஏன் சொல்லவில்லை என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. மரமும் மௌனமாக பலமுறை இவனைத் தட்டிக்கொடுத்ததேதவிர காரணம் கூறவில்லை. சார்லஸ், எபி, அண்ணா ஆரோன் ஆகியோர் ஹாஸ்டலில் சேர்ந்த  ஒருவாரத்திலேயே கீழ் அறையில் குப்புறப் படுக்கவைத்து, வன்புணர்ச்சி செய்தபோது ஏற்பட்ட வலியைவிட அம்மா நினைப்பு ஏற்படுத்திய வலிதான் ரொம்ப பெரிதாக இருந்தது. என் தேவனே, என் தேவனே! ஏன் என்னை கைவிட்டீர் என்று * நான்காம் வார்த்தை மரத்தின் கீழ் பலமுறை புலம்பி, ஜெபித்திருக்கிறான். தலையை சீவிக்கொண்டான். கோரைமுடி மறுபடி நெற்றியில் வந்து விழுந்தது. ட்ரங்க் பெட்டியிலிருந்து பைபிள், பாட்டு புத்தகத்தை எடுத்துக்கொண்டான். செதுக்கியிருந்த லோத்து குடும்பத்தின் சாக் சிற்பங்களை அட்டைப் பெட்டிக்குள்ளிருந்து எடுத்துப் பார்த்தான். சரியாக 5 மணிக்கு வரிசையாக நின்ற போது, காலேஜ்பசங்கள் வார்டன் வீட்டுக்கு ஆயில் கேன் எடுத்துப் போவதைப் பார்த்தான். பாட்டுப் பாடியபடியே சர்ச்சுக்கு நடந்தனர். ஆரோன் கெட்ட வார்த்தைகளோடு அதே பாடலைப் பாடிவந்தான். ஆல்டர் அருகே விசுவாச நாடாரின் மதுரைமல்லி மேலிருந்து போதையுடன் இவனை அழைத்தது. விசுவாசநாடார் பெருமிதத்துடன் முன்வரிசையில் தெரிந்தார்.

* மார்க்கு 15 : 34.

எபி அண்ணா பின் வரிசையில் அமர்ந்தபடி இவன் பின்புறத்தை முழங்காலால் தடவினான்.

     5.30க்கு ஆராதனை ஆரம்பித்தது. பிவுப் பச்சைநிற ஸ்டோலுடன் போதகருடன் கம்பிரமாக ஆல்டரில் ஏறிநின்றார். குறுந்தாடி லேசாக நரைத்திருந்தது. நீண்ட கறுப்பு கயிற்றில் அவர் கழுத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்த தங்கச் சிலுவை விளக்கொளியில் மின்னியது.

ஆண்டவரின் உயிர்த்தெழுதல் நித்யவாழ்வை நமக்கு அருளுகிறது. நாம் மரணத்தை அஞ்சாமல் சந்திக்க உதவுகிறது. நம் வாழ்வில் உள்ள துக்கத்தையெல்லாம் மாற்றி சந்தோஷத்தை அருளி ஆண்டவர் வழி செய்கிறார். எனவே ஈஸ்டர் பண்டிகை வாழ்வின் கொண்டாட்டம்.பிஷப் தாபுயைத் தடவியபடியே இவனைப் பார்ப்பது போல் தெரிந்தது.

     திரும்பிப் பார்த்தான். கூட்டம் பிதுங்கி வழிந்தது. போதகர் பரிசுத்த ஆவி இறங்கியது போல் உணர்ச்சிவசப்பட்டு ஜெபித்தார். கறிக்கடையில் தொங்கிக்கொண்டிருக்கும் ஆடுகள் ஞாபகத்துக்கு வந்தது. சபையார் இன்று நிறைய ஆட்டுக்கறி வாங்குவார்கள். வீடுகளில் ஒரே கொண்டாட்டமாக இருக்கும். இதுதான் பிஷப் சொன்ன கொண்டாட்டமாக இருக்குமோ என்ற சந்தேகம் இவனுக்குத் வந்தது. இரத்தம் சிந்தும் ஆடுகளுக்கு உயிர்தெழுதல் உண்டா என்று அடிக்கடி தோன்றுகிறது. ஆராதனை முடிந்து வெளியில் வரும்போது வார்டன் அழைத்தார்.

வீட்டில் ஏசம்மாள் இருப்பா, வெந்நீர் எடுத்துக்னு பிஷப் ரூமுக்கு போ.வார்டன் மச்சினிச்சி குலுங்கும் மார்பகத்துடன் இவன் கன்னத்தை கிள்ளிக்கொடுத்த வெந்நீர் ஃபிளாஷ்குடன் பிஷப் தங்கியிருந்த கெஸ்ட் ரூமுக்குப் போனான். பங்களாவின் சற்று ஒதுக்குப்புறமான அறை. தரை முழுக்க கறுப்பு கிரானைட். அறை அருகே யாரும் இல்லை. ஜன்னல் வழியே பார்த்தான். பிஷப் பக்கத்தில் சுசிலா டீச்சர். அவள் வெள்ளை முதுகின் மீது பிஷப்பின் வலதுகை மேலும் கீழுமாக நகர்ந்து கொண்டிருந்தது.

கதவுக்கு நேராக வந்து அய்யாஎன்றான்.

பிஷப் திடுக்கிட்டு இவனைப் பார்த்தார். என்ன?”

வென்னீருங்கய்யா.

டேபிள்ள வெச்சிட்டு போ.

வேகமாக வெளியே ஒடி வந்தான். *1முதல் வார்த்தை ஆலமரத்தின் கீழ் நின்றான். உடம்பு வெட வெடத்தது. காற்றில் விழுதுகள் அவன் முதுகை வருடியது. ஒவ்வொரு முறையும் ஆரோன், சார்லஸ் இவன் முதுகைத் தடவிக் கொடுத்தது, எச்சிலால் ஈரமாக்கியது நினைவுக்கு வந்தது.
வார்டன் இவனை அழைத்தார்

என்னா குடுத்துட்டியா?”

வெச்சிட்டேங்கயா.

பிஷப் அய்யா ரூம்ல வேற யாரு இருந்தது?”

சுசிலா டீச்சருங்கய்யா

பத்தியா நா சொல்லல? என்று மச்சினைச்சியை பார்த்து சிரித்தார் வார்டன்.

சரி உன்னோட சாக் உருவங்கள ரெடி பண்ணு. பேரண்ட் மீட்டிங்க்கு பிஷப் அய்யா வராரு. அப்ப அவர்கைல காட்டலாம். அப்புறம் உன்னோட ஃபாஸ்டர் பேரண்டஸ் இன்னிக்கு வரல.

சென்ற கிறிஸ்மசில் பாஸ்டர் பேரண்டஸ்வுடன் முருங்கை மரத்தின் கீழ் போட்டோ எடுத்த போது, இரண்டு மகள்களை அனைத்து நின்றிருந்தனர். இவன் ஓரமாக இருந்தான். *2 முருங்கை மர வசன போடு முழுக்க கம்பளி பூச்சிகள் அப்பி இருந்தன.


*1 பிதாவே இவர்களுக்கு மன்னியும். தாங்கள் செய்கிறது. இன்னது என்று அறியாதிருக்கிறார்கள்.                                                                           -   லுக்கா 23 : 34

*2 தாகமாய்இருக்கிறேன்                                                         -   லுக்கா 19 : 28



வறாண்டாவில் மணி அடித்ததும் பொங்கலுக்கு வரிசையில் நின்றான். பின்னால் நின்ற மாணிக்கம் ட்ரஸ் நல்லாருக்குடீகண்ணுஎன்று மார்பை  அழுத்தினான். சிலர் சிரித்தனர். சாப்பிடப் பிடிக்காமல் அப்படியே கொட்டி விட்டு அழுதடியே மாடிக்குச் சென்றான். ஜன்னல் வழியே புளியமரத்தின் மீது ஏறினான். மரம் அவன் கண்ணீறைத் துடைத்தது. நீ எதுக்கும் கவலைப்படாதே. நான் எப்பவும் உன்னோட இருப்பேன்.என்று தேற்றியது. நான் ஹாஸ்டலை விட்டு போன பொறவுஎன்று கேட்டான். எப்பவும். என் ஆயுள் முடியும் வரை”, என்ற போது அவனால்  அழுகையை அடக்க முடியவில்லை.

11 மணிக்கு உள்ளே வந்தான். வரும்போது மூத்திர வாடை அதிகமாகத் தெரிந்தது. தன்னைப் போல வேறு சிலரும் மரத்தின்வழியே ஒன்றுக்கு இருக்கிறார்கள் என்று தெரிந்தது. மரம் வாயைத் திறக்க மறுத்தது. எல்லோரும் மாமரத்தின் கீழ் கூடியிருந்தனர். இவன் பெட்டியிலிருந்து சாக் சிற்பங்களையும், ஒரு அட்டையையும் எடுத்துக் கொண்டு மாமரம் அருகே வந்து பின்வரிசையில் தனியாக அமர்ந்தான். பெற்றோர்கள் தங்கள் மகன்களுடன் ஒட்டிக் கொண்டு அமர்ந்திருந்ததைக் கவனித்தான். குட்டிப்போட்ட பூனை போல் வார்டன் உலாவிக் கொண்டிருந்தார். உள்ளிருந்து மாட்டுக்கறி பிரியாணி வாசனை மூக்கைத் துளைத்தது. எச்சிலை விழுங்கிக் கொண்டான். குற்றரோயிகளுக்கான ஐக்கிய விருந்தில் இரண்டு மட்டன் துண்டை எடுத்ததுக்காக எட்வின் சார் அடித்தது நினைவுக்கு வந்தது. *இரண்டாம் வார்த்தை மரத்தை திரும்பி பார்த்தான்.

*இன்று நீ என்னோடே கூட பரதேசில் இருப்பாய்          -லுக்கா 23 : 43

          சரியாக 12 மணிக்கு பிஷப், போதகருடன் வந்தார். சற்று தூரத்தில் உடன் வந்தவர்கள் நின்று கொண்டனர். வார்டன் சால்வை போட்டு வரவேற்ற பின் பிஷப் எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தார். இவன் குனிந்து ஒளிந்து கொண்டான். பாட்டு, பிரசங்கம், ஜெபம் முடிந்தபிறகு பிஷப் ஒவ்வொரு பையனாக அரையாண்டு மதிப்பெண்களைக் கேட்டார். இவன் அறிவியல், கணிதம், பாட மதிப்பெண்களைச் சொன்னபோது, “என்ன மார்க் இது? சிங்கிள் டிஜிட். மாதாமாதம் 700 ரூபாய் செலவுக்கு பணம் கொடுக்கிற ஃபாஸ்டர் பேரண்ட் என்ன நினைப்பார்? அவன் பேர்என்ன.

அய்யா சாமுவேல் ராஜரத்தினங்கய்யாவார்டன் கைகட்டியபடி சொன்னார்.

அடுத்தமுறை இவ்வளவு குறைவா வாங்கினா ஹாஸ்ட்டல்ல தொடர்ந்து படிக்க முடியாது. புரியுதா?” தலையாட்டினான். உள்ளங்கை வியர்த்துக் கொட்டியது.

கூட்டம் முடிந்த பிறகு வார்டன் இவனை வரவழைத்தார். அய்யா ஜோஷ்வா சாக்ல உருவங்கள் செய்யறதுல கெட்டிக்காரங்கயா.

அப்படியா?”

மேஜையில் உருவங்களை நிறுத்தினான். முதலில் லோத்து. அவனுக்கு முன்னால் மகள்கள். அவனுக்குப் பின்னால் லோத்து மனைவி, அடுத்து

தேவதூதர்கள் ரெக்கைகளுடன்.

என்னது?”

லோத்து குடும்பங்கயாஎன்றான் இவன்

லோத்து மனைவியை கறுப்பா பெயிண்ட் பண்ணி இருக்க. உப்புதூண் வெள்ளை தானே?” “இல்லீங்கயா, லோத்து பொஞ்சாதி, பிள்ளைங்க எந்த தப்பும் பண்ணலீங்கயா. அதனால கறுப்பா இருக்காங்க. உப்புக்கல் இல்லீங்கயா.

லோந்து, தேவதூதர்கள் மேல ஏன் வெள்ளை பெயிண்ட் அடிச்சிருக்க?”

அவுங்கதான் கெட்டவங்கயா தப்பு செஞ்சவங்கயா.

அதுகோசரம் வெள்ளை பெயிண்ட் அடிச்சியிருக்கிறீயா.

சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது. பிஷப் தாடியைதடவியபடி போதகரைப் பார்த்தார்.

சண்டே ஸ்கூல்ல இப்படித்தான் தியாலஜி சொல்லித்தரீயா?”

இல்லீங்க பிஷப்

பிஷப் வேகமாக வெளியேறினார். அவருக்குப் பின்னால் போதகர் இவனை முறைத்துப் பார்த்து விட்டு கூட்டத்தோடு சென்றார்.

நியூயார்க்கிலிருந்து பிஷப் ஆர்தர் அருஸ்தாஸ் ரெவ்ரண்ட் சகாயத்திற்கு அனுப்பிய மின் அஞ்சல் : 01.09.2013    18.08

சிலுவைப்பாட்டின் 7 திருமொழிகளில் பி.எச்.டி பண்ணுவது குறித்து கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

நான் பிஷப்பாக இருந்தபோதுதான் கிறிஸ்துநாதர் ஆலயம் அருகே 2005-ல் பெரிய வெள்ளியன்று 7 மரங்களை தேர்ந்தெடுத்து 7 பெயர்ப்பலகை எழுதப்பட்டன.

அது முதல் அந்த மரங்களுக்கு கீழ் பல கூட்டங்கள் நடத்தப்பட்டன. முதல் மரம் - பாஸ்டரேட், ஆர்பிட்ரேஷன் குழு கூட்டங்கள். 2 திருமொழி மரம் - குஷ்டரோகிகளுக்கு அன்பின் ஐக்கிய விருதுகள்  3வது மரம் - குடும்ப உறவுகளை பறை சாற்றியபடி மாணவர் விடுதிக்கு அருகில். 4,5 திருமொழி மரங்கள் - வள்ளமை மிகுந்த உபவாச கூட்டங்கள். *6, *7 திருமொழி மரங்கள் - விடுதியின் நிர்வாக குழு கூட்டங்கள்.

*பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.   -லுக்கா 23 : 46

*முடிந்தது     - யோவான் 19 : 30

துரதிஷ்டவசமாக மூன்றாவது வார்த்தையைத் தாங்கிய புளிய மரம் வெட்டப்பட்டு விட்டது. அதன் அடிமரம் முழுக்க உப்புப் பூத்து மரம் சாக ஆரம்பித்து விட்டது. ஹாஸ்டல் பிள்ளைகள் சிறுநீர் கழித்து அந்த மரத்தை பாழாக்கி விட்டனர். 2008ல் ஜோஷ்வா என்ற எட்டாம் வகுப்பு மாணவன் காலேஜ் படிக்கும் மாணவனின் ஆண்குறியை கடித்துக்குதறி பெரிய பிரச்சனையாகி விட்டது. இந்த சம்பவம் அந்த மரத்திற்குக் கீழேதான் நடந்தது. கடவுள் கிருபையால் அவன் பிழைத்துக்கொண்டான். அந்த ஜாஷ்வாவை நிர்வாகக்குழு முடிவின் படி ஹாஸ்டலிலிருந்து வெளியேற்றி விட்டோம். அதன்பிறகு அந்த மரத்திலிருந்து இரவு நேரங்களில் அடிக்கடி ஒரு அழுகுரல் கேட்டுக் கொண்டிருப்பதாக பிள்ளைகள் கூறினர். வார்டனும் போதகரும், அப்பிடிக் கேட்டதாக என்னிடம் புகார் செய்தனர். தாங்க முடியாத மூத்திர நாற்றம் வேறு. எனவே மரத்தை வேரோடு எடுத்து விட்டோம்.

அங்கு தற்போதுள்ள போதகரிடம் சீக்கிரமாக வளரக் கூடிய ஏதேனும் ஓரு மரத்தை உடனே நடச்சொல்லுங்கள். அதில் 3-வது  திருமொழியின் போது போர்டு வைக்க வேண்டும். அதிக ஆழத்துக்கு வேர்கள் ஊடுரூவாத பல மரங்கள் இருக்கின்றன.

ஏழு திருமொழி மரங்கள் என்ற உன்னதமான கான்செப்டை நாம் விட்டுவிடக் கூடாது.

Saturday 7 September 2013

மலையின் தனிமை


             



கருகிய காகித அடுக்குகள் கிணற்றடியில் புரண்டு கொண்டிருந்தன. உடைந்த சில காகிதத்துண்டுகள் காற்றில் நகர்ந்து, காம்பவுண்டு சுவரில் ஏறமுயன்று பின் கீழே விழுந்து சிதறின.

ஒரு குச்சியால் பிரிசில்லா காகித அடுக்குகளைப் புரட்டினாள். கறுப்புத் துகள்கள் குபுக்கென்று எழுந்தன தீய்ந்த நாற்றத்தோடு. அடுக்குகளுக்கு அடியில் நீலநிற டைரி ஒன்றும், வேறு இரண்டு நோட்டுகளும் ஓரங்கள் எரிந்த நிலையில் கிடைத்தன. நோட்டுப்புத்தகங்களில் கிரேசுக்கு எழுதிக் காண்பித்தவை இருந்தன தேதி வாரியாக. 2013 டைரியில் திறந்தாள். மார்வெல்ஸ் செல்வநாயகம் என்று கறுப்பு மையில் எழுதப்பட்டிருந்ததைக் கவனித்தாள்.
          வீட்டிற்குள் பெனிட்டாவும், ஆலனும் விளையாடிக் கொண்டிருந்தனர். கட்டிலில் கிரேஸ்அத்தை முடியை விரித்துப் போட்டு, எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். இவள் டைரியைத் திறந்தாள்.

ஐனவரி 1                            
     8.30 ஆராதனைக்கு சர்ச் சென்றேன். வீட்டைப் பூட்டி சற்று தூரம் சென்ற பின் மறுபடியும் வந்து பூட்டை இழுத்துப்பார்த்தேன். கிரேஸ் உள்ளே தூங்கிக் கொண்டிருந்தாள். திரும்புவதற்கு (கம்யூனியன் முடிந்து) 10.30 ஆகிவிட்டது. வரும் வழியில்  கமிஷனர் ஆபிஸ் அருகில் கால் கிலோ சிக்கன், நாடார் கடையில் காய்கறிகள் வாங்கினேன். தங்கம் ஸ்டோரில் அரிசி 2 கிலோ
(பொன்னி). வீட்டைப்பூட்டினோமா என்ற சந்தேகம் மறுபடியும் வந்தது.
கிரேஸ் கட்டிலைப் பிடித்தபடி அழுது கொண்டுருந்தாள். சர்ச்சுக்குப் போனதாக சைகையில் (காலண்டரைக் காட்டி) சொன்னேன். அவள் தலையசைத்தாள். சுவரில் இருந்த ஸ்டீபன் போட்டோவைக் காட்டி தன் தலையைத் ஆட்டி கொண்டுவா என்றால். எதற்கென்று புரியவில்லை.அருகில் இருந்த டம்பரிளிலிருந்து தண்ணீரைத் தொட்டு ஸ்டீபன் தலைமீது அவள் வைத்தபோது தான் எனக்கு புரிந்தது. அவனுக்கு ஞானஸ்தானம் கொடுத்த நாள் 1.1.65.
இது மட்டும் எப்படி ஞாபகத்தில் நிற்கிறது?

          சுட்டி சேனலை உற்சாகமாகப் பார்த்தாள்.
கறி நன்றாக வெந்து இருந்தது. இரண்டு வாய் அதிகமாகவே சாப்பிட்டாள். வாயைக் கழுவி விடும்போது பேசினைத் தட்டிவிட்டாள் நல்லவேளை கிழே விழுந்தது. கட்டில் பாழாகவில்லை.
சி...சி...ருக்கு ....சோ...” சோ... இரண்டு நாட்களாக எலக்ட்ரானிக் சிட்டுக்குருவிக்குச் சோறு வைக்கச் சொல்கிறாள். கிண்ணத்தில் கொஞ்சம் சோறு குழம்பு வைத்து அவளிடம் காட்டி விட்டு, அறையில் சிட்டு குருவிக்கு முன்னால் வைத்தேன்.
சாப்பு... சாப்பு...” என்றாள். குழந்தைபோல் சிரித்தாள்.
          வழக்கம் போல் கார்ட்டுன் சேனல் பார்த்தாள்.
 மாலையில் போதகர் வந்து ஜெபம் பண்ணினார். ராபின் ஜான்சன் மனைவியுடன் மெக்ரனட் கேக்டுடன் மகள் கல்யாணப் பத்திரிகை கொடுக்க வந்தான். தாமஸ் மவுண்ட் சர்ச் போனதாக சொன்னபோது, சி.எஸ்.ஐ காரனுக்கு எதுக்கு ஆர்சி சர்ச் என்று கேலி பண்ணினேன். தாமஸ் இந்தியா வந்த போது சி.எஸ்., ஆர்சி இருந்ததா என்று திரும்பிக் கேட்டான். ஐந்து ஆண்டுகளாக என்னால் மலை ஏற முடியவில்லை. தலைசுற்றல். உச்சியிலிருந்து சென்னையைப் பார்ப்பது அலாதியானது. கிறிஸ்மஸ் காலங்களில் தாமஸ் மவுண்ட் பகுதி முழுக்க நட்சத்திரங்கள் தொங்கும்.

ஐனவரி 5
இன்று இரண்டு முறை பல் விளக்கினேன். ஒரு கோடிக்கு தரமுடியமா என்று ஒரு ரியல் எஸ்டேட்காரன் பட்ரோடில் வைத்து என்னைக்கேட்டான் வீட்டைக் கேட்டு இந்தப்பக்கம் வந்துவிடாதே என்று கோபமாகச் சொன்னேன். ஒவ்வோரு செங்கலிலும் என் விரல் ரேகை இருக்கு. கிரேஸ் எத்தனை வாளி தண்ணீர் இறைத்திருப்பாள். அந்தப் பையலுக்கு என்ன தெரியும். இரண்டு அறைகளிலும் மகன்கள் விளையாடியதுகிறுக்கியது, சிரித்தது, படித்தது, மூச்சுவிட்டது, அழுதது, ஜபித்து பாடியது எல்லாம் அப்படியே இருக்கிறது. வராண்டாவில் எத்தனை பிள்ளைகள் ட்யூஷன் கற்றிருப்பார்கள். வீட்டின் மீது வாங்கி கடன்தான் பின்னால் பிள்ளைகள் எம்.எம்.சி, அண்ணா யுனியவர்சிட்டி படிப்பு, வெளிநாடு செல்ல எல்லாவற்றிற்கும் உதவியது. இதெல்லாம் யாருக்கும் விற்கக் கூடியதில்லை.
இரண்டு முறை கிரேசுக்கு டயபர் மாற்ற வேண்டியதாயிற்று. Haloperidol, Tonact 10 ஆகிய மாத்திரைகள் வாங்கி வந்தேன்.
ஓ வென்று கத்திக்கொண்டு ஆலன் ஓடிவந்தான். பின்னால் பெனிட்டா. மறுபடி கத்திக்கொண்டு உள்ளே ஓடினர். கிரெஸ் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி இருந்தாள். வராண்டாவில் தாமஸ் ஸ்டீபனுடன் ஜெயகர் அமர்ந்திருந்தான். ஸ்டீபன் தாமஸ் மனைவிகள், பிள்ளைகள் லாட்ஜிலிருந்து இன்னும் வரவில்லை. கேர் டேக்கர் வத்சலா வந்திருந்தாள். அத்தைக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள்.

ஐனவரி 8
போதகர் ஐயாவை கத்திபாரா அருகில் பார்த்தேன். வயதான காலத்தில் ஏன் ஐயா இப்படி சிரமப்படுகிறீங்க. அமெரிக்கா, யுகேக்கு பிள்ளைகள்கிட்ட போயிட வேண்டியதுதானே என்றார்.
ஸ்டீபன், தாமஸ்க்கு போன் பண்ணியும் எடுக்கவில்லை. ஜெயகர் மெடிக்கல் கான்பரன்சுக்காக இந்தோனேசியா போய் இருப்பாதாக பிரிசில்லா சொன்னது. பசங்கள் பெனிட்டா, ஆலன் வெப் கேமராவில் வந்தனர். கிரேஸ் பார்த்தாள். புரியாமால் விழித்தாள். அதைவிட அந்த பிள்ளைகளுக்கு எங்களை யாரென்று தெரியவில்லை. ஸ்டீபன், தாமஸ் மனைவி, பிள்ளைகளுக்கு தமிழே தெரியவில்லை.
என் வளையல், செயின் எங்கே என்றாள் திடீரென்று. பீரோவிலிருந்து எடுத்து வந்து போட்டேன். கொஞ்சநேரம் சுட்டி டிவி பார்த்துக்கொண்டிருந்தாள். அப்படியே தூங்கிப் போனாள்.

ஐனவரி 15
இன்று ஒரே கூட்டம். காய்கறி விலை உயர்ந்திருந்தது. புளிக்குழம்பு வைத்திருந்தேன். ஊட்டியபோது விரலைக் கடித்துவிட்டாள். நன்றாகவே சாப்பிட்டாள். வயித்தாலை போனது.
மாலை 7 மணிக்கு அவளை வீல் சேரில் வைத்து உருட்டிக் கொண்டு சில்வர் தெரு முனைக்கு வந்து, பிளாட்பாரத்தில் ஏற்றி நின்றேன். அவளுக்கு ஒரே குஷி. போய்க் கொண்டே இருந்தன வாகனங்கள் நெருக்கமாக. இடது கையை உயர்த்தி ஸ்கூல் பக்கம் காட்டினார். எத்தனை முறை இருவரும் நடந்து, ஸ்கூல் பின்வழியாக உள்ளே போய் வந்திருப்போம். சி.எஸ்.ஐ சர்ச் பக்கம் கரம் திரும்பியது. “நம்ம சர்ச்” என்றாள். பின் தாமஸ் மவுண்ட் பக்கம் கை உயர்ந்தது. பிக்னிக் என்றால் லெமன் ரைஸ், முட்டைபிரியாணி கட்டிக் கொண்டு தாமஸ் மவுண்டு ஏறியதை நினைக்கிறாளோ?
பசங்களோடு மலையேறும்போது மகிழ்ச்சி, பயம் ஏற்பட்டிருக்கிறது. ஸ்டீபன், ஜெயகர் எங்கேயாவது தடுக்கி விழுந்து விடக்கூடாது என்ற பயம். எவ்வளவு வேகமாக ஓடுவார்கள். தாமஸ் இருபுற சுவர்மீது. இவர்களோடு மேலே சென்று ஜெபம் பன்னியபின் சாப்பிட்டு விட்டு, 3 மணிக்கு திருப்புவது... இதெல்லாம் கிரேசுக்கு ஞாபகம் இருக்குமா? பசங்களுக்கு?

ஐனவரி 18
மூன்று மகன்களும் கிரேசுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னார்கள். (17 ஆம் தேதி இது பற்றி மெயில் அனுப்பினேன்) அவளுக்கு எங்கே புரிந்திருக்கப் போகிறது? ட்ராஃபிக் சிக்னல் அருகே பேக்கரியில் கேக் வாங்கி வந்து, அவளை வெட்டவைத்தேன். 75 என்று எழுதிக்காண்பித்தேன். தலையாடினாள்.
போதகர் வந்தார். தன் மனைவியின் பேச்சைக்கேட்டு அரக்கோணத்தில் தனியாக இருந்த தன் அம்மாவைக் கவனிக்ககாமலேயே விட்டுவிட்டதாகக் கூறி கண்கலங்கினார். அம்மா போன வருடம் இறந்து விட்டார்கள். குற்ற உணர்வு இன்னும் அதிகமாகியது. பாவம். நான் ஆறுதல் கூறினேன். இன்று யா பண்ணிய ஜபம் உருக்கமாக, உண்மையாக இருந்தது.

ஐனவரி 24
மனம் கனமாக இருந்ததால். மலை அடிவாரம் சென்றேன். புரியாத மொழி, கலாச்சாரம், மதம், என்ற சூழலை செயின்ட் தாமஸ் எப்படி தனியாக சமாளித்தார்? தாமஸ் மலைக்குள் நிறைய கதைகள் புதைந்து இருக்கிறது. எனக்கு 60 வருட Friend, Philiosopher and guide தாமஸ் மலைதான். இன்றைக்கு எவ்வளவோ மாற்றங்கள். ஆனால் மலை அப்படியேதான் அமைதியாக இருக்கிறது.

ஐனவரி 25
கிளாரா ஜெயந்தியும், அகல்யாவும வந்தனர். கிரேசின் கையைப் பிடித்தபடி வெகுநேரம் அமர்ந்திருந்தனர். டீ கொடுத்தேன்.
கிரேஸ் மௌனமாக அவர்களைப் பார்த்தாள். “சாரி நல்லா இருக்கு” என்றாள் திடீரென்று. அகல்யா சேலையைத் தடவிப் பார்த்தாள். “கிரேஸ்ஃபுல் டீச்சர்னு பேர் வாங்கினவங்க இப்படி ஆய்ட்டாங்க.... டீச்சர்தான் எங்களுக்கு காட்மதர்.” “தெரியும் எப்பவும் உங்களை பத்தி சொல்வாள்.” என்றேன். அவர்கள் ஜெபித்து விட்டுச் சென்றனர். கிரேசுக்கு கடைசிவரை அவர்கள் யாரென்று தெரியவில்லை. சற்று நேரம் கழித்து மெகந்தி என்று சொல்லி சிரித்தாள். மெகந்தி பூசும் ஜெயந்தியை மறக்கவில்லைதான்.


பிப்ரவரி 10
                ஐபிஎஸ்காரர் வீட்டருகே இருந்த மணலில் சறுக்கி விழுந்தேன். நல்லவேளை ஒருவர் பிடித்துக்கொண்டார். “இங்கிலனட் ஹெர்குலஸ் சைக்கிளை இவ்வளவு உயரமாக நான் பார்த்ததில்லை. எதுக்குசார் இந்த வயசுல சைக்கிள்,” என்றார் அந்த ஆள். இந்த சைக்கிள்தான் எனக்கு இன்னோரு கால். தாம்பரம், அடையாறு, ராயபுரம் என்று என்னைப் பல இடங்களுக்கு கூட்டிச் சென்றிருக்கிறது. அதை எப்படி விடுவது? நல்ல வேளையாக கிரேசுக்கு வாங்கிவந்த அஞ்சப்பர் கறிக்குழும்பு சிந்தவில்லை. மல்லிகைப்பூ கூடைக்கு வெளியே விழுந்து விட்டது. எனக்கு இரண்டு நாட்களாக சாப்பிடவே பிடிக்கவில்லை. அல்சர் தொல்லை மறுபடி வந்துவிட்டது. வலதுபுற வயிற்றில் வலி.

படுத்திருக்கும்போது, ஜெயகர் அருகில் வந்து வயிற்றைத் தொடுக் கேட்டான்

என்னப்பா பண்ணுது?” “ஒன்றுமில்லப்பா சும்மா அல்சர்.” “உடம்ப கவனிக்குனும்பா”. “சரிப்பா”. திடுக்கிட்டு எழுந்தேன். வெறும் கனவு. ஸ்கைப்பில், கைப்பேசியில் ஜெயகருடன் பேச முயன்றேன். கிடைக்கவில்லை. இன்று விடுமுறைதான், எங்கு போயிருப்பான்?
ஜெயகர் வாசலில் வந்து நின்றான். “ப்ரிசி என்ன செய்ற?”
ஒன்றுமில்ல, உங்க அப்பா டைரி கிடைச்சது”.
பழைய பேப்பர், சுவடி, டைரி எப்பவும் இதே நினைப்புதானா”?
ஆர்கியாலிஜிஸ்டுக்கு வேல அதுதான்?”
அவன் உள்ளே போனான்

பிப்ரவரி 15
          கண்ணாடியை பேண்ட் பாக்கிட்டில் வைத்துக்கொண்டு அதை அரைமணி நேரம் தேடினேன். அவளை நடக்க வைக்க கைத்தாங்கலாகத் தூக்கினேன். காலை ஊன்றவே மறுத்தாள். வாசலில் சாக்கடைக்குள் காலை முறித்துக் கொண்டு மூன்று மாதங்களாகி விட்டது. இனி நடப்பாளா? ஸ்டீபனுக்கு சோறு என்று குருவியைக் காண்பித்தாள். எனக்கு ரொம்ப களைப்பாக இருந்தது.

பிப்ரவரி 17
          இன்று காலை எழுந்ததும் ஸ்டீபன் வெளியே போயிருக்கானா என்று கேட்டாள், மூத்தவன் மீது அதிகபாசம், குறையவே இல்லை. இண்டர்நெட்டில் ஸ்டீபன் கிடைக்கவே இல்லை. அவன் பேசி பல நாட்களாகி விட்டன. தாமஸ் ஸ்கூலுக்கு மூன்று பேரையும் விடுமுறை நாட்களில் கிரேஸ் அழைத்துப்  போய் ஆம்பளை போல கிரிக்கெட் விளையாடிதை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. “டியூஷன் டியூஷன் அலையிரீங்களே பிள்ளைகளோடு விளையாட கூட நேரமில்லாம என்றாள். தலையில் கிரிக்கெட் பால் அடிபட்டு ரத்தம் வழியும் போது கூட பிள்ளைகளோடு இன்னும் நெருக்கமாக இல்லாமல் விட்டோமே என்று குற்ற உணர்வு அடிக்கடி வருகிறது.

பிப்ரவரி 20
          ஜெயகர் சேவியர் இறந்து விட்டதாக போனில் அவன் தம்பி கூறினான். என் நண்பர்கள் எல்லோரும் போய்விட்டனர். ஸ்ரீ வில்லிபுத்தூரில் இனி யாரும் இல்லை. மனசு ரொம்ப வேதனை அடைந்தது. எங்கோ ஒரு இருட்டு மூலையில் தனியாக விடப்பட்டது போல இருந்தது. இருட்டில் கிரேசின் கரம் மட்டும் என்னைத் தடவிக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஏன் இப்படிப் பைத்தியக் காரத்தனமாக தோன்றுகிறது?

          11 மணிக்கு கிரேஸ் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கையில் கதவைப் பூட்டிக் கொண்டு தாமஸ் மவுண்ட் அடிவாரத்திற்கு நடந்து சென்று படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டேன். சென்னைக்கு ஜெயகர் வரும்போதுதெல்லாம் இங்கு வந்து மணி கணக்கில் பேசி கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. மூன்றாம் மகனுக்கு உன் பெயர் வைக்கப்போகிறேன் என்றபோது அவன் வெட்கப்பட்டான். பிறகு வெஸ்லி இங்கிலிஷ் சர்ச் உள்ளே பழைய நாற்காலியில் அமர்ந்து, ஜெபித்துவிட்டு, வீட்டிற்கு வந்தேன் மதியம் சாப்பிடப் பிடிக்கவில்லை. கிரேசுக்கு எழுதிக் காண்பித்தேன் ஜெயகர் சேவியர் காலமானது பற்றிப் புரிந்துப்போல் தலையாட்டினாள். ஜெயகர் போட்டோவைக் காண்பித்து எடுத்துவரச் சொல்லி போட்டோவைத் தடவிக் கொடுத்தாள். இன்று இரவு ஜெபத்தில் கதறி அழுதது எனக்கே ஒருமாதிரி இருக்கிறது. இரவு கொஞ்சமாகவே சாப்பிட்டேன். வாந்தி வருவது போலவே இருக்கிறது.

பிப்ரவரி 22
          ஏன் யாரிடமிருந்தும் போன் வரவில்லை? எம்எம்சியில் ஸ்டீபனும் ஜெயகரும் படிக்கையில் தினம்தினம் இரவு எத்தனை காலேஜ் சம்பவங்களை  என்னிடம்சொல்லியிருப்பார்கள். தாமஸ் மட்டுமென்ன அண்ணா யுனிவர்சிட்டி புரபசர்கள், ரோட்ராகிட் மீட்டிங் பற்றி. தூங்குவதற்கு வெகுநேரம் ஆகியிருக்கிறது. இந்த உலகில் நாம் வாழ்ந்துக்கொண்டிருப்பது அர்த்தமில்லாமல் இருக்கிறதோ. அதனால்தான் ஸ்டீபனும் தாமஸ்சும் தாங்களே திருமணம் செய்துக்கொண்டனர்.
மார்ச் 2
          தாமஸ் ஆஸ்பத்திரி போனேன். ஸ்கேன் பண்ண வேண்டியதாயிற்று. Gall Blader wall thickening, multiple nodes multiple focal leisions in liver all in favour of malignancy மாதிரித் தெரிகிறது என்று ரிபோர்ட் எழுதியிருக்கிறது. ஸ்கேன் ரிப்போட்டை ஸ்டீபனுக்கும் ஜெயகர்ருக்கும் மெயில் பண்ணினேன். ஸ்டீபனிடம் இருந்து தகவல் இல்லை. ஜெயகர் உடனே 1 மணி நேரத்தில் பதில் அனுப்பிட்டான் பயாப்சி பண்ணச் சொல்லி.

மார்ச் 8
          இன்று பயாப்சிக்கு போனேன் வீட்டில் அகல்யா டீச்சரை விட்டுவிட்டு. பயங்கர வலியாக இருந்தது


மார்ச் 10
          கேன்சர் கன்பர்ம் ஆகிவிட்டது. வலி அதிகமாகத் தெரிந்தது. வயிற்றுக்குள் ஏதோ ஒரு மிருகம் என்னைத் தின்று கொண்டிருப்பது போல் உணர்ந்தேன்.யோபுவை விடவா எனக்கு அதிக துக்கம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். தேவன் வழிகாட்டுவார். யோபு புத்தகம் முழுவதையும் 2 முறை படித்தேன், கண்கள் ரொம்ப மஞ்சளாக தெரிகிறது.

மார்ச் 12
          மிகவும் வற்புறுத்திக் கேட்டபிறகே இன்று டாக்டர் வின்ஸ்டன் சொன்னார் கல்லீரலிலும் பரவி விட்டதால் 6 மாதம் வரை தாக்குப் பிடிக்கலாமென்று.
          ஸ்டீபனிடமிருந்து இன்னும் பதிலே இல்லை. தாமஸ்க்கு போன் பண்ணி சொன்னேன். (நல்ல வேளை கிடைத்தான்) அப்படியா என்று அதிர்ந்தான். ஆறுதல் கூறினான். எனக்கு அழுகை வந்து விட்டது. எல்லோரையும் பார்க்கவேண்டும் என்று தோன்றியது.

மார்ச் 15
          இன்று கிரேஸ் கரத்தை பிடித்துத்கொண்டு உட்காருவது ரொம்ப ஆறுதலாக இருந்தது. தூங்கிக்கொண்டிருந்தாள். வீடுகட்டும் போது, பிள்ளைகள் காலேஜ் படிக்கும்போது, வெளிநாடுபோகும்போது ஏற்பட்ட கடன் தொல்லையில் வேதனைப்பட்ட போதெல்லாம், பயபடாதீங்க கடவுள் வழிகாட்டுவார் என்று தைரியம் சொல்வாள். அவள் விசுவாசம் ரொம்ப ஆழமானது. கல்யாணமானபுதிதில் தாமஸ் மவுண்ட் உச்சிக்கு கட்டுச்சாதத்துடன் சென்றது, கிளிக் 3யில் புகைப்படம் எடுத்தது, மாலை வரை இருந்தது எல்லாம் மறக்க முடியுமா? வீடு கட்ட அங்குதான் முடிவு செய்தோம்.
          அவளை நாற்காலியில் அமர வைப்பதும், குளிப்பாட்டுவதும் ரொம்ப ரொம்ப சிரமமாகமாறிவிட்டது. உடம்பு திடீரென ரொம்ப பலவீனமாகத் தெரிகிறது. எனக்குப் பிறகு யார் இவளைப் பார்ததுக் கொள்வார்கள்?

மார்ச் 22
          ராஐகோபாலிடம் பேசினேன். அவன் இன்னமும் 9 ஆம் வகுப்பு மாணவன் போலதான் வார்த்தைக்கு வார்த்தைகு சார் போட்டு பேசுகிறான்.
          ஏப்ரல் 1 அன்று வருவதாகக் கூறினான். வேண்டிய பணத்தை அவன் நிறுவன அக்கவுண்ட்டுக்கு மாற்றினேன்.

மார்ச் 23
          மிக மிக களைப்பாக இன்று இருக்கிறது. கைகால் நடுக்கமாயிருக்கிறது. வயிற்றுவலியும் தாங்க முடியவில்லை. நகங்களில் மஞ்சள் பூசியது போல் இருக்கிறது. கிரேஸ் திடீரென கையைத் தட்டினாள். குருவி கத்தியது. மறுபடி மறுபடி தட்டி குருவியைக் கத்த வைத்தாள். அவளுக்கு கேட்டிருக்காது. ஸ்தோத்திரம்.

மார்ச் 24
          ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம். தாமஸ் ஒரு அந்நியனால் குத்தப்பட்டபோது என்னவெல்லாம் யோசித்து இருப்பார். தன் தனிமையை நினைத்து இருப்பாரா? இயேசு நாதரை திட்டியிருப்பாரா?

மார்ச் 25
          நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன் ஏசாயா 43: 2    திடன் கொள்ளுங்கள் நான் உங்களுடனே இருக்கிறேன் ஆகா 2:4

மார்ச் 29
          இன்று பெரிய வெள்ளி. மும்மணி தியானத்திற்குப் போக முடியவில்லை. வலி தாங்க முடியவில்லை. பயப்படாதே தேவன் உனக்கு தயவு பண்ணினார் அப் 27: 24     நீ வேண்டிக் கொண்டதின்படியெல்லாம் அவர் செய்வார்        உபா 18:16. உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் யோவான் 16:20

மார்ச் 31
          உன் தேவனை சந்திக்கும்படி ஆயத்தப்பட்டு ஆமோஸ் 4:12
          இன்று ஈஸ்டர். சர்ச் செல்லவில்லை. போதகர் வீட்டிற்க்கு வந்து இருவருக்கும் கம்யூனியன் கொடுத்தார்.

ஏப்ரல் 1
          ராஐகோபால் வந்து கிரேசை அழைத்துக் கொண்டு (ஸ்ட்ரெச்சரில் வைத்து- பார்க்க சகிக்கவில்லை) போனான். நான் உடன் வர மறுத்து விட்டேன். சில காகிதங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டான். வெறிச்சோடி இருந்தது வீடு. கதறி அழுதேன். தனிமை என்னை அழுத்தி மூச்சுத் திணற வைத்தது. வயிற்று வலியும், வயிறுவீக்கமும், வாந்தியும் அதிகமாயிற்று.

ஏப்ரல் 2
          மூன்று பையன்களின் இமெயில் ஐடி, போன் நம்பர்கள், செக், பாஸ்புக், பென்ஷன் புத்தகங்கள், ஏடிஎம் கார்ட், எல்ஐசி பாலிசி, எஃப்டி, வீட்டுப்பத்திரம் ஆகியவற்றை ஒரு துணிப்பையில் போட்டு பீரோவில் வைத்துப் பூட்டினேன். சாவியை மேஜையில் வைத்தேன். பசங்களின் போன் நம்பர்கள், இமெயில் மற்றும் முக்கியமானவர்களின் போன் நம்பர்களை மற்றொரு காகிதத்தில் எழுதி, பீரோ சாவிக்குக் கீழே வைத்தேன். நாளை காலை 7 மணிக்கு ஜெபம் பண்ண வருமாறு போதகரிடம் கேட்டுக்கொண்டேன். முன் கதவைத் தாழிடவில்லை. சற்று நேரம் கிரேஸ் கட்டிலில் படுத்திருந்தேன். அவள் வாசம் இன்னும் அங்கேயே மிதந்து கொண்டிருக்கிறது.

          வேண்டாம் டைரிகள் இருக்கக் கூடாது.
          தற்கப்புறம் டைரி காலியாக இருந்தது. காகிதங்கள் எரிந்த இடத்தை மறுபடியும் கிளறிப் பார்த்தாள் பிரிசில்லா. Alprazolam மாத்திரை அட்டைகள் எரிந்த நிலையில் பளபளத்தன. வேறொன்றும் கிடைக்கவில்லை.
          டைரியுடன் வீட்டிற்குள் வந்தாள். பெனிட்டாவும், ஆலனும் எலக்ட்ரானிக் சிட்டுக்குருவியுடன் ஒரே விளையாட்டு, சிரிப்பு.
          ஸ்டீபன், தாமசை காணவில்லை. கேர் டேக்கர் வத்சலா கிரேசை ஈரத்துணியால் துடைத்து, பவுடர் போட்டாள். ஜெயகர் 800 ரூபாய் கொடுத்தான்.
          “தாங்க்ஸ் சார். மார்வல்ஸ் ஐயா மட்டும் சொல்லியிருந்தா, முன்னாடியே வந்திருப்பேன்.” “ஸ்டின்ஜி மேன்” ஜெயகர் முணுமுணுத்தான்.
          ஜெய் ஆன்டிய லண்டனுக்கு கூட்டிப்போய் பாத்துக்கலாமா? பிரசில்லாவை முறைத்தான் ஜெயகர்.
          ஆர்யு கிரேசி? எப்படி முடியும் ரெண்டு பேருமே பிசி. ராஜகோபால் வில்லுக் ஆஃப்டர் ஹெர் டோன்ட் வொர்ரி வேணும்ன்ற பணம் அனுப்பிடலாம். விசாரிச்சதுல அவுங்க ஹோம் இஸ் ஒன் ஆஃப்த பெஸ்ட் இன் சென்னை.
          ராஜகோபால் 5 மணிக்கு ஆம்புலன்சில் வந்தான். வராந்தாவில் எண்ணெய்க்கறை படிந்த சுவர் பகுதியைத் தடவினான். கண்களைத் துடைத்துக் கொண்டான். “திங்கட்கிழமை அப்பா ப்ரேயர் மீட்டிங்களுக்கு அம்மாவே அழைச்சி வந்தா போதும்”
ஓகே சார் ரு ரெக்வெஸ்ட்”
சொல்லுங்க.”
சாரோட சைக்கிள நா எடுத்துக்கலமா?”க்ஷ்யூர் ஜெயகர் ராஜகோபால் தோளை அழுந்தியபடி சிரித்தான்.
          ஐந்தரைக்கு ஸ்டீபன், தாமஸ் ரியல் எஸ்டெட்காரன் இனோவாவில் வந்து இறங்கினர்.
ஜெயகர் நாளை வீடு ரெஜிஸ்ட்ரேன் 2 குரோர்ஸ்”
தேங்க் காட், ஜெயகர் வானத்தைப் பார்த்தான். ”
          வாலன்டினாவும் நடால்யாவும், பிள்ளைகளுடன் வந்தனர். வால்ன்டிமா கையில் டூரிம் கைட் இருந்தது.

          ஆலன் டிவந்து குருவி கத்தவில்லை என்று ஜெயகரிடம் கொடுந்தான் ஷிட் என்று திட்டியபடி குருவியைத் தூக்கியெறிந்தான் ஜெயகர். அது கிரோஸ் கட்டிலுக்குக் கீழே உருண்டு போனது சோ..று... கு..ரு..வி என்றாள் கிரோஸ்.